மதுரையில் உள்ள பள்ளிக்கு உதவுங்கள் பிரபல பாலிவுட் நடிகை வேண்டுகோள்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், மதுரையில் உள்ள ஒரு பள்ளி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனது தாய் மற்றும் அவரது அறக்கட்டளையால் கட்டப்பட்ட ஒரு பள்ளியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதுரையில் அமைந்துள்ள மவுண்டைன் வியூ என்ற பள்ளியானது, கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏழை குழந்தைகளுக்கு தரமான ஆங்கில வழிக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. தற்போது 200 குழந்தைகள் வரை இங்கு பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படிப்பதற்கான வசதி உள்ளது. மேலும் 14 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டி இருக்கிறது. நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்து பல குழந்தைகளின் கனவை நனவாக்குவோம். தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது மிகவும் அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  6வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை