அரசுகளை நம்பவேண்டாம்- நீதிமன்ற செல்ல மாநில தலைவர் அழைப்பு

ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்

*அவசரம் கவனம் தேவை*
பேரஅன்புடையீர்
வணக்கம் .

தலைவர்களின் பதிவுகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது ?

தமிழ் நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளது

நீங்கள் அதிகாரியை சந்தித்து ஆலோசனை பெற்று வெற்றி காண்போம் என்ற செய்தி ஏற்புடையது அல்ல ஏன் என்றால் *உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே நீங்கள் ஆலோசனை கேட்க விரும்பும் அதிகாரிகள்தான் அதை மறக்க வேண்டாம்…*

அடுத்த படியாக சென்னை சென்று நீங்கள் யாரை சந்தித்தாலும் உங்கள் கோரிக்கையை ஏற்று உங்களுக்கு *உதவ முன்வராமாட்டார்கள் இதில் முதல்வரும் அடக்கம்…?*

ஏனென்றால், *அதிகாரிகளின் மூலமாக ஊராட்சிகளின் அதிகாரங்களை முழுமையாக பரித்ததில் முன்பு ஆண்ட அரசுக்கும் இப்போது ஆளுகிற அரசுக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்…*#

# உயர்ந்த பட்ச அதிகாரங்கள் கொண்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாராங்களைஉரு குலைத்து பொது மக்களிடம் தலைவர்களுக்கு கெட்ட பெயர் பெற்றுத்தந்ததில்இந்த அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முழு பங்கு உண்டு…!#

நிதி இல்லை, அதிகாரம் இல்லை,அப்போ ஏன் இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்?

ஏனென்றால், *மத்திய அரசிடம் நிதி பெற வேண்டும்* உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ‌‌… இவை இரண்டுமே மிகவும் முக்கியமான ஒன்று *அதனால் தான் 2019 இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி மத்திய அரசுகளின் நிதியை பெற்றாகி விட்டது*
*உச்ச நீதிமன்றம் உத்தரவும் செயல்படுத்தி ஆகி விட்டது* # அப்போ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் …#

Also Read  உள்ளாட்சி அமைச்சருக்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி உருக்கமான கோரிக்கை

இதில் பாதிக்கப்பட்டது யார் 2019 ல் பல்வேறு கனவுகளுடன் தன் கை முதல் களை இழந்து கடன் பெற்று ஊரில் உற்றார் உறவினர்களின் பகையை சம்பாதித்து *ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனவர்கள் மட்டுமே*! என்பதை நினைவில் கொள்ளுங்கள்…!

*இதற்கு ஒரே வழி….!*

*அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மூலம் நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்‌…!*

போராட்டம் நடத்தினால் வென்று விட முடியுமா? என்றால் முடியாது…மாறாக மத்திய – மாநில அரசுகளின் கவனங்களுக்கும் பொது மக்களுக்கும் தெரியவரும் அவ்வளவுதான்…?

*நம் உரிமைகளை நீதிமன்றங்கள் வாயிலாக தான் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…!*

AGAMT-2 வழக்கு நமக்கு *சாதகமாக இல்லை என்பதை நினைத்து யாரும் வருத்தப்பட்ட வேண்டாம்* அடுத்த கட்ட நடவடிக்கையாக மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெஞ்சிலும் நமக்கு சாதகமாக இல்லை என்றால் *உச்ச நீதிமன்றம் எடுத்துச் செல்ல தயாராக உள்ளோம்…!*

# தற்போது டெண்டர் வைத்தாலும் அவைகள் அனைத்தும் ரத்தாகும், இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..‌#

*ஊராட்சி கணக்கு எண் 2 ல் உள்ள கூடுதல் இருப்பு தொகையை ஊராட்சி கணக்கு எண் 1 ற்க்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒத்துழைப்பு அளித்தால் அனைத்தும் சாத்தியமாகும்…!*

Also Read  11ல் ஒன்று வெற்றி- ஆனாலும் போராட்டம் நிச்சயம்

அடுத்த மாதம் *ஆகஸ்டு 15 ம் தேதிக்கு பின் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைத்து மத்திய மாநில அரசுகளின் கவனங்களை ஈர்க்கும் வகையில் சென்னையில் மாபெரும் *உண்ணாவிரதம் போராட்டம்* நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்*

நன்றி.                                                  அரசை எஸ் எம் முனியாண்டி, மாநில தலைவர், தமிழ் நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை 14