திமுக, அதிமுக திருட்டு கூட்டணி – சிவகங்கை சிறப்பு….வம்பளந்தான்

திமுக அதிமுக கூட்டணி
  • மணி…சிவகங்கை மணல் திருட்டை நம்ம மின்னிதழில் படிச்சேன். இயற்கையை கொள்ளையடிக்க போட்டி போட்டு நிக்கறாங்களே…
  • சபரி…களத்தில எதிரும் புதிருமா நிக்கிற திமுகவும் அதிமுகவும் கூட்டணி  வச்சு கொள்ளை அடிக்கிறாங்க..
  • என்ன சொல்ற மணி…ரெண்டு கட்சியும் கூட்டணியா…
  • ஆமாம் சபரி…திமுக சேர்மன் ஒரு பெண்மணிக்கு ரெண்டு குவாரி..லெட்டர் பேடு கட்சிக்கு கூட குவாரி கொடுத்திருக்காரு செந்தில் ஆண்டவரு.
  • அப்ப…மாவட்ட மந்திரி தலையீடு கிடையாதா மணி…
  • அட போப்பா…மந்திரி மகன் போடுற ஆட்டத்துக்கு அளவே கிடையாது. அதுமட்டுமா…மாவட்ட அதிகாரியா இருக்கிற ஒரு பெண் அதிகாரி கட்டுகிற கல்லாவுக்கு அளவே கிடையாதாம். அதில் வேற அந்தம்மா சீக்கிரம் ஓய்வு பெற போகிறாகளாம்…
  • அரசியல்வாதிகாளுக்கு சலிச்சவங்களா அதிகாரிக. நேர்மையான அதிகாரிங்கன்னா அந்த கிராம அதிகாரி போல கஷடப்பட வேண்டியது தான் மணியா…
  • சரியாசொன்ன…அதுமட்டுமில்ல,வேலுநாச்சியார் பெயரில உள்ள விருந்தினர் மாளிகையில் தான் மெயின் கல்லா இருக்குதாம். மணல் கொள்ளை நடத்துன பங்கை அங்க வச்சு தான் பிரிக்கிறாங்களாம் சபரி…
  • மக்கள் பிரச்சனைக்கு ஒன்னு சேராத கழகங்கள், கொள்ளை அடிக்கிறதுக்கு கூட்டணி வச்சிருக்கு.அப்ப…ஏமாளிங்க நம்ம போல சாதாரண சனங்க தான் மணி.
Also Read  பில்டிங் ஸ்ட்ராங்கு...மேஸ் மட்டம் வீக்காகுது - வம்பளந்தான்