தன்னிலை விளக்கம் சொல்லும் மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி

அன்பிற்குரிய ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் மதுரை மாவட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)ஆக பணியேற்று இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டது.

இந்த காலகட்டத்தில் நான் யாரையும் எனது தனிப்பட்ட விஷயத்திற்காகவோ அல்லது ஊராட்சிகள் துறை சார்ந்த விஷயத்திற்காகவோ யாரையும் துன்புறுத்தி கஷ்டப்படுத்தி வேலை வாங்கவில்லை.

ஊராட்சி செயலர்களை உற்ற சகோதரர்களாகவே பாவித்து பணிசெய்து வந்துள்ளேன்.

ஊராட்சி செயலர்களை நான் என்றும் மிரட்டியோ, அடிமையாக நினைத்தோ வேலை வாங்கவில்லை.

என் அறைக்கு வரும் ஊராட்சி செயலர்களைகூட நிற்கவைத்து பேசியதில்லை,என் முன்பாக இருக்கையில் உட்காரச் சொல்லித்தான் பேசி அனுப்பி வருகிறேன்.

உட்கார மறுப்போரை கூட உட்கார்ந்து பேச தயங்கினான் இங்கு நிற்க வேண்டியதில்லை என்று சொல்லித்தான் வேலை வாங்கி உள்ளேன்.

பிறரைப் போல் ஆய்வு என்ற பெயரில் எந்த ஊராட்சி செயலர்களையும் மிரட்டியோ, துன்புறுத்தியோ எவ்வித தொந்தரவும் கொடுத்ததில்லை.
ஊராட்சி செயலர்களை மாறுதல் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துவரும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் முடியாது என்று சொல்லித்தான் அனுப்பி உள்ளேன்.

வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சொல்ல வேண்டிய பணியை நேரடியாக உங்களிடம்சொல்லி வேலை வாங்கியது வேண்டுமானால் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

Also Read  சிந்தித்து பார்த்து! செய்கையை மாற்று! மாற்றுவோமா மக்களே?

இனி மேற்கொண்டு நான் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமே பேசிக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

இப்படி ஒரு மறுப்பு செய்தி வந்ததாக ஒரு ஊராட்சி செயரலர் நம்மிடம் தெரிவித்தார்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் ஒரு ஊராட்சி செயலர் எழுதிய இந்த செய்தி சங்கம் சார்ந்தது இல்லை என்றார் அவர்.