ஊராட்சி செயலாளர் மரணம் -சிவகங்கை மாவட்ட சங்கம் இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் N. மணக்குடி ஊராட்சி செயலாளர் திரு.விஸ்வநாதன் அவர்கள் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

31.12.2021 அன்று நாம் மதுரையில் பார்த்து வந்தோம் அன்று சிகிச்சை நல்லமுறையில் உள்ளது அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி நம்மை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

வயதான தாய் தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மாவட்ட மையத்தின் சார்பில் ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

கண்ணீருடன்

TNPSA
சிவகங்கை மாவட்டம்

நமது மின்னிதழின் சார்பாகவும் இதய இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Also Read  வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி - விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு