கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை – அச்சத்தில் கிராம மக்கள்

கடலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வந்தவர் நிலவழகன் என்ற சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது மேலும் 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் அறிவிப்பு.

Also Read  பாலயம்கோட்டை ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்