ஊராட்சிகளுக்கு குழப்படியான மாநில நிதிக்குழு ஒதுக்கீடு

SFC எனும் மாநில நிதிக்குழு ஒதுக்கீடு  என்பது  ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாதமாதமாகவோ,மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அனுப்பப்படுகிறது.

அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிப் பட்டியல் நமக்கு கிடைத்தது. அதன்படி…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் செயல்முறைகள் ந.க.அ3/034/2022-3 நாள்:05.01.2022 ன்படி மாநில நிதிக்குழு மானியம் 11/2021 & 12/2021 மாதங்களுக்கு வரப்பெற்றது.

அனைத்து கிராம ஊரட்சிகளின் கணக்கு எண் 1,2 & 7 க்கு விடுவிக்கப்பட்டு 07.01.2022 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

முதல் கணக்கு ஊராட்சிகளின் அன்றாட செலவீனத்திற்கும், இரண்டாம் கணக்கு ஊராட்சிகளுக்கான மின்சாரம் போன்ற சேவைகளுக்கும்,ஏழாவது கணக்கு ஊழியர்களின் சம்பளத்திற்கும் பிரித்து வழங்கப்படுகிறது.

இதே சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பான்மையான ஊராட்சிகளுக்கு முதல் கணக்கில் மாதம் ஆயிரத்திற்கும் குறைவான தொகையே வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கே மாதம் குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் காலகட்டத்தில், ஒரு ஊராட்சிக்கு ஆயிரம் ரூபாய் என்பது நகைப்புக்கு உரியது ஆகும்.

பல பஞ்சாயத்து தலைவர்கள் தனது பயணத்தை செலவழித்து, பிறகு கணக்கில் இருந்து எடுக்க வேண்டியது உள்ளது என்கின்றனர்.

இந்த நடைமுறையால் போலியான பில் எழுதி வெவ்வேறு கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது நாடு முழுவதும் நடக்கிறது.

Also Read  ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்

ஆக…தப்பு செய்வதற்கு அரசே வழியை ஏற்படுத்துவது போல உள்ளது. வருமானமே இல்லாத ஊராட்சிகளின் முதல் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை வரவு வைத்தால் மட்டுமே நிர்வாகம் திறன்பட இயங்கும்.