நம்பி வாங்க! சந்தோஷமா போங்க! வம்பளந்தான்!

என்ன மணியா நம்ம கொரோனா எப்படி போய்கிட்டு இருக்குது…

அட பாவி சபரி உங்க தளபதி மாதிரியே பேசுறியே… ஒன்றிணைவோம் வா அப்படின்னு சொல்லி ஒரு பெரிய மனுசனுசனையே டிக்கெட் வாங்கி கொடுத்து அனுப்பி வச்சுட்டிங்க…

மணியா கொஞ்சம் பாத்து பேசு… அவருக்கு நோய் வந்துச்சு ட்ரீட்மெண்ட் எடுத்தாரு… பாவம் அவருக்கு ஆயுசு அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு போயிட்டாரு அத போயி இப்ப நீ பேசறது சரியில்லையே..!

ஆனா ஒன்னு சபரி காசு… பணம் இருக்கிறவங்க எல்லாம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி பக்கமே தலை வைச்சு கூட படுக்காம…  தனியார் ஆஸ்பத்திரிக்கு தானே ஓடுறாங்க…!

அப்போ அவரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்த உயிர் தப்பிச்சு இருக்கலாமின்னு சொல்லுறியா மணியா….!

நான் அந்த அர்த்தத்துல சொல்லல சபரி…  இப்போ கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில கொரோனா ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டவங்க எல்லாரும் நோய் குணமாகி வரலையா..? அப்படிங்கிற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன்..

மணியா இந்த கொரோனாவுக்கு ஏழை, பணக்காரன், ஜாதி, மதம், மொழி, இனம்… எதுவுமே கிடையாது. அந்த வைரசுக்கு  எல்லோரும் சமம் தான்…

இத விட்டுட்டேயே சபரி..!

எதை மணியா…?

இந்த….. எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், போலீஸ்.. அப்படிங்கர.. அரசு அதிகார வர்க்கத்தையும் கொரோனா தொற்று விட்டு வைக்காம ரவுண்டு கட்டி சுத்தி வளைச்சு அவங்களையும் தொத்திக்கிச்சு அப்படிங்கறத நீ சொல்லாமல் விட்டுட்டேயேன்னு நான் சொன்னேன்…?

Also Read  கொரோனாவை கற்பித்தவன் காட்டுமிராண்டியா? வம்பளந்தான்!

பாத்தியா மணியா இது வம்புதானே…? என்ன வம்புல மாட்டி வைக்கிறீயே… ஆமா நீ சொன்ன மாதிரி வைத்தியம் பார்க்கிற டாக்டரை கூட நம்ம கொரோனா விட்டு வைக்கலை தான்.. கவனிச்சியா….!

கவனிக்காமல் என்ன இதோபாரு சித்த வைத்தியர் வீரபாகு கிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்தவங் எல்லாம் ஜம்முனு வீட்டுக்கு கிளம்பிட்டாங் பாத்தியா….  சித்த மருத்து மேல நெறைய பேருக்கு நம்பிக்கையே இல்லாம போச்சு… சபரி…!

மணியா மொதல்ல கவர்மெண்ட்ல இருக்கிற அதிகாரிங்க.. மந்திரிங்க.. எம்.எல்.ஏ….! எம்.பி.ங்க…. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியை நம்பி… கவர்மெண்ட் டாக்டரையும் நம்பி… போயி ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டாங்கன்னாதான்…. மத்த பொது மக்களுக்கும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி மேல நம்பிக்கை வரும்…!

சபரி ஏதோ நீ வில்லங்கமா திங்… பண்ற மாதிரி தெரியுதே…!

ஆமா மணியா நான் எது சொன்னாலும் உனக்கு ஒன்னு வில்லங்கமா தெரியும் இல்ல வம்பா தெரியும்…!

ஆமா சபரி நீ சொன்ன மாதிரி நமக்கு தெரிஞ்சு வரைக்கும் செத்துப்போன V.V.I.P., கள் எல்லாமே தனியார் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து தான் செத்துப் போயிட்டாங்… நல்ல வேலை நீ சொன்ன மாதிரி இவங்க எல்லாம் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியிலே ட்ரீட்மென்ட் எடுத்து இருந்தாங்கன்னா… அடேங்கப்பா…????

Also Read  வியாதியா??? விதியா??? வீரியம் யாருக்கு??

மணியா போதும்… வேண்டாம்.. நீ வேற எதையோ சொல்ல வர நான் இந்த விளையாட்டுக்கு வரல…!?!?!