சோழபுரம் சாலைக்கு விடிவு காலம் பிறந்தது!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழபுரம் ஊராட்சி கிராமத்திலிருந்து ஏரிக்கரைக் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக இருந்தது.

அந்த பாதை பாதுகாப்பு இல்லாமல் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாகமுள்புதர்களுக்குள்மூழ்கிக்கிடந்த
அந்த பாதையை அகலப்படுத்தும் பணியை ஒப்பந்ததாரர் PKR. ராஜா என்பவர் எடுத்து மராமத்து வேலைகள் செய்தார்.

செயல்படாத தலைவியும் செயல் தலைவர் என்ற புதுப் பதவியில் உள்ள சோழவரம் ஊராட்சியில்… இந்தப் பணி கடந்த பத்து நாட்களுக்குள் வெற்றிகரமாக எப்படி நடைபெற்றது என்ற கேள்வியை நாம் பொதுமக்களிடம் கேட்டபோது.

இந்த பாதை திட்டப்பணி உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே திட்டமிடப்பட்ட பணியாகும்.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இவர்களின் முயற்சியால் பணி மிக வேகமாக நிறைவடைந்தது
என்றார்கள்.

சோழபுரம் கிராம் புவாம்பட்டு கோடி கோடிக்கரையை இணைக்கும் 1.5 கிலோமீட்டர் பாதையை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செப்பணியிடப்பட்டுள்ளது.

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

Also Read  திருவாமூர் ஊராட்சி - கடலூர் மாவட்டம்