நூறுநாள் வேலை திட்டம் – நடப்பது என்ன?

தேசிய வேலை உறுதி திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளையும், குளறுபடிகளையும் தடுக்கும் வகையில், சமூக தணிக்கை நடைமுறையை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேசிய வேலை உறுதி திட்டத்தில், மண் வேலைகளுடன், கட்டுமான பணி, தார்ரோடு உள்ளிட்ட பணிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அடிப்படை விவசாய பணிகளும், இணைக்கப்பட்டுள்ளது. நுாறு நாள் திட்ட பணியாளரை கொண்டு, பதிவு செய்துள்ள விவசாயி, தங்களது நிலத்தில், பாத்திகட்டுவது, மண் வரப்பு அமைப்பது போன்ற பணிகளை செய்யலாம்.

தற்போதைய நிலவரப்படி, 273 ரூபாய் தினக்கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓராண்டில், ஒரு நபருக்கு மட்டும், 26,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. பணித்தள பொறுப்பாளர் தினமும் கணக்கெடுப்பு நடத்தி, தொழிலாளர் வருகையை உறுதி செய்கின்றனர்; ஒன்றிய அலுவலகத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகம் மூலம், வேலைக்கு வராத பணியாளரின் சம்பளம் பங்கிடப்படுவதாக, குற்றச்சாட்டு உள்ளது.

இதுமட்டுமில்லாமல், திட்ட நிதியில், கட்டுமான பணிகள் நடக்கும் போது, நுாறு நாள் திட்ட பணியாளர் கணக்கில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஒப்பந்ததாரர் பணிகளை செய்த பிறகு, தொழிலாளர் கணக்கில் விடுவிக்கப்பட்ட சம்பள தொகையை வாங்கி, ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளால், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன.

Also Read  ஸ்ரீ செந்தட்டி அய்யனார் புகழ் அறிவோம் வாங்க! பாகம் 9!

விவசாய நிலங்களில் பணி நடக்கும் போது, விவசாயிகள் கணக்கில் விடுவிக்கப்பட்ட சம்பள தொகையை கேட்டு, வாங்கி கொள்வதாகவும் புகார் பதிவாகியுள்ளது.

எனவே, மத்திய அரசு திட்ட நிதியில் முறைகேடு நடப்பதை தடுக்க, சமூக தணிக்கை வழிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.