தலைமைச் செயலாளராக தமிழர்
முருகானந்தம்
தமிழ்நாட்டில் மீண்டும் தலைமைச் செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முருகானந்தம் இஆப அவர்களுக்கு இதய வாழ்த்துக்கள்.
எப்போதும் தமிழகம் சார்ந்தவர்கள்,பிற மாநிலத்தவர்கள் என உயர் அதிகாரிகள் மட்டத்தில் இரு பிரிவுகளாக இருக்கும்.
பெரும்பான்மையான முதன்மை பதவிகளில் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே பணியில் இருப்பார்கள். விதிவிலக்காக சில பதவிகளில் தமிழர்...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக...
ஏப்ரல் 24 – பஞ்சாயத்துராஜ் தினத்தில் பிரதமர் உரை
இ-பஞ்சாயத்து
பிரதமர் நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் உரையாற்றவுள்ளார்.
இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரதமர் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுவார்.
நரேந்திர மோடி இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த இ-பஞ்சாயத்து போர்ட்டல் மற்றும் மொபைல்...
ஒரே பெயரில் ஊராட்சிகள்,வங்கி கணக்கில் குளறுபடிகள் – ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே..
நாம ஏற்கனவே பேசிய செய்தி தான். தமிழ்நாட்டில் ஒரே பெயரில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. நமது இணைய தளத்தில் அதுபற்றிய செய்தியும் வெளியிட்டுள்ளோம் தலைவரே...
பல மாதம் ஆகிவிட்டதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஒரே பெயரில் உள்ள ஊராட்சிகளின் வங்கி கணக்கு எண் மாற்றி மாற்றி பதிவேற்றம்...
அரியூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அரியூர்/arivur
அரியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 10 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அரியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
உள்ளாட்சி தேர்தல் – நடக்குமா?நடக்காதா?
உள்ளாட்சி தேர்தல்
வரும் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு பதவி காலம் முடிகிறது. அப்படியெனில், தேர்தலுக்கான வேலைகளை செப்டம்பரில் தொடங்கினால் தான் டிசம்பரில் தேர்தலை நடத்த முடியும்.
பணிகள் தொடங்கியதா?
தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதா என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம்.
வாக்குப் பதிவு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சி இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. பனிரெண்டாயிரத்திற்கும்...
ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
கிராம ஊராட்சி
இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, இணைய தளத்தை முழுமை படுத்தாமலே...
காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது...
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக...மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,உள்ளாட்சி அனைத்து பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கிராமப்புறத்தில்...
ஊரக வளர்ச்சி துறையில் பணி உயர்வு மற்றும் இட மாற்றம்
நாடாளு மன்ற தேர்தலுக்காக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை அனைத்து துறைகளிலும் இட மாறுதல் செய்ய உத்தரவு இடப்பட்டது.
அதன்படி ஊரக வளர்ச்சி துறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.