அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்யலாமா வேண்டாமா ?

அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து வேலை செய்யலாமா வேண்டாமா என்ற சர்ச்சைக்குரிய கேள்வி சமீபகாலமாக பொதுமக்களிடையே தலைதூக்கி வருகிறது.

நாம் அறிந்த வரையில் எத்தனையோ பல நேர்மையான அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யும் போது.

அந்த அதிகாரியை இடமாற்றம் செய்யாதே….!
அவரின் சேவை… எங்களுக்குத் தேவை…! என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி பொது மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வுகளை பல முறை நாம் கண் கூட பார்த்துள்ளோம்.

அதற்கு எதிர்மறையாக….!

தமிழக அரசே… தமிழக அரசே… இந்த அதிகாரியை உடனே பணியிட மாற்றம் செய்…!
இல்லையென்றால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகளையும் நாம் தவிர்க்காமல் கண்டுள்ளோம்.

இதற்கு காரணம் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் தாங்கள் சாகும் வரை இதே அதிகார பீடத்தில் அமர்ந்திருப்போம் என்ற நினைப்பில்.

தங்களின் அதிகார மமதையில் செய்யும் அடாவடித்தனமான சட்ட விதிமுறைகளை அத்துமீறும் அராஜக செயல்களே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஒரு அரசு ஊழியர் தான் வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாக… அதாவது வரவுக்கு மீறிய சொத்துக்களை குவிப்பதற்காக தராதரம் பாராமல் ஏழை எளிய மக்களை கசக்கிப் பிழிந்து லஞ்ச ஊழலில் திளைத்து கூத்தடிக்கும்  அதிகாரிகளை மக்கள் எப்படி விரும்புவார்கள்….?

அரசு ஊழியர் என்பவர் அரசு சட்ட விதிமுறைகளை அனைவருக்கும் சமமாக பாவித்து பாகுபாடு இல்லாமல் செயலாற்ற வேண்டும்.

அரசு ஊழியர் ஒரே இடத்தில் பணியாற்றும் போது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் நன்றாக நெருக்கமாக பழக கூடிய வாய்ப்புக்கள் கண்டிப்பாக ஏற்படும்.

Also Read  செய்திதுறைக்கு ஆறு மண்டல இணை இயக்குனர்கள் நியமனம்

அதன் காரணமாக தனக்கு வேண்டியவர்களுக்காக, அரசு விதிமுறைகளை மீறி சில சாதக பாதகமான செயல்களை செய்யக் கூடிய சூழல் அல்லது நிர்ப்பந்தம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இயல்பாக உருவாகும்.

அது சட்டத்துக்குப் புறம்பானதகும். பொது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகக் கூட அமையும்.

எனவே தான் அரசு ஊழியர் என்பவர் ஒரே இடத்தில் பணி செய்யாமல் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும்.

இந்த கருத்தை வலியுறுத்தி தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லிநாயனப்பள்ளி பத்து ரூபாய் இயக்கத்தின் சமூக ஆர்வலர் ஆறுமுகம்.

கடந்த மாதம் பதிவு தபாலில் ஊராட்சி செயலாளர்கள் இட மாறுதல் தொடர்பாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது…

அன்புடையீர் வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதாலும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் ஊராட்சி செயலாளர்களும் புரிதல் இன்றிய நிலையில் உள்ளதாலும் பல்வேறு நிர்வாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலும் சில ஊராட்சி செயலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊராட்சிகளில் தொடர்ந்து நீண்ட காலமாக பணிபுரிவதால் உறவுமுறை, அரசியல் நிலைப்பாடு போன்ற காரனிகளால் அரசின் பல்வேறு திட்டங்களில் ஊழல், முறைகேடு நிகழவும் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் குழப்பம், குந்தகம் எற்படவும் காரணமாகின்றன.

Also Read  வீராச்சிகுப்பம் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்

எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை அரசாணை எண்.72 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் 09.07.2013ன் படி பணியிட மாறுதல் செய்திட மதிப்பிற்குரிய முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களை கிராம மக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது….!

அவரின் கோரிக்கையை பெற்ற முதல்வரின் தனிப்பிரிவு.

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராஜேந்திரன் அவர்களுக்கு அனுப்பி பத்து ரூபா இயக்க ஆறுமுகத்தின் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்தது.

அந்த மனுவை ஆழ்ந்து தீவிரமாக ஆராய்ந்து படித்த உதவி இயக்குனர் ராஜசேகரன்.

அந்த கடிதத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு கடந்த 08.09.2020 அன்று ஆறுமுகத்தின் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது..

பார்வையில் காணும் மனு தங்களின்  அலுவலகத்துடன் தொடர்புடையதால் மேல் நடவடிக்கையின் பொருட்டு இத்துடன் இணைத்து சமர்ப்பித்துள்ளேன்.

இது “முதலமைச்சரின் தனிப் பிரிவு மனு என்பதால் சிறப்பு கவனம் செலுத்தி ஒரு வாரத்திற்குள்” நடவடிக்கை எடுக்கப்பட்டு விவர அறிக்கை அளிக்குமாறு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி தனது கடமையை முடித்துக்கொண்டார்.

இதற்கான பதில் உடனடியாக கிடைக்கும் என்று வாசகர்களாகிய நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை…

அரசின் கடிதம் என்பது சத்தியம்..! ஆனால் அதன் பயணம் என்பது மெதுவாகத்தான் என்பதுதான் உண்மை..!

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமைச் செயலாளர்