பில்டிங் ஸ்ட்ராங்கு…மேஸ் மட்டம் வீக்காகுது – வம்பளந்தான்

மணியா…மே மாதம் நடக்கப்போற பொதுதேர்தலுக்கு ரெண்டு பெரிய கழகங்களும் தயாராகி வருது.

அட போப்பா சபரி…இரண்டுலேயும் பெரிய கட்சியான அதிமுகவுக்கு பேஸ் மட்டம் பலவீனமாகி வருது.

என்ன சொல்ற மணியா…வடிவேலு காமெடியா இருக்கே.

ஆமாம் சபரி…அதிமுகவின் பலமே அவங்களோட தொண்டர்கள் தான். கீழமட்ட நிர்வாகிகள அமைச்சர்களும்,மாவட்ட செயலாளர்களும் கண்டுக்கிறதே இல்லையாம்.

அப்படியா மணியா…

அதுமட்டுமில்ல…முக்கிய பொறுப்புகள்ல தங்களோட சொந்தக்கரங்கள போடுறதும்,பதவி வாங்கித் தருததும் மட்டுமே நடக்குதாம்.அப்டியே திமுகவா மாறுதாம் அதிமுக.

திமுகவ ஏன் மணி உள்ள இழுக்கிற. மத்த விசயத்த சொல்லு.

அமைசருங்க,மாவட்ட செயலாளருங்க செய்றத தலைமையும் கண்டுக்கிறது இல்லையாம்.சாதாரண தொண்டனும் பதவிக்கு வரலாம்கிற அதிமுக பார்முலாவ அடிச்சு உடச்சு மேஸ் மட்டத்த பலவீனப்படுத்துராங்க…

அப்படின்னா…தளபதிக்கு முடி சூட்ட அதிமுக தயாராகி வருன்னு சொல்லவர்ரீயா மணி.

கிட்டத்தட்ட அப்படித்தான். அந்த அம்மா மாதிரி அதிரடி நடவடிக்கை எடுத்தாத்தான் அதிமுக நிலைக்கும்.அடிமட்ட வரைக்கும் காலியான பதவிய நிரப்பி,அமைச்சர்கள அடிக்கி வச்சாத்தான் அதிமுக பிழைக்கும் சபரி.

சேலமும்,பெரியகுளமும் என்ன செய்யப் போறாங்கன்னு பொறுத்திருந்து பாப்போம் மணியா..

 

Also Read  வச்சு செய்யுறாரு மருது....கல்லல் ஒன்றியத்தில் திமுக காலி- வம்பளந்தான்