வல்லராமபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்

மேலநீலிதநல்லூர் புதிய BDOக்கு வல்லராமபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சிறப்பான வரவேற்பு..

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக பதவியேற்றுள்ள திருமதி.வேலம்மாள் அவர்களுக்கு நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்ற தலைவர் .S.சிவஆனந்த் அவர்கள் தலைமையில் வல்லராமபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

BDO அவர்களுடன் வந்திருந்த ஒன்றிய பொறியாளர் முருகேசன் அவர்களும் ஊராட்சி மன்றத் தலைவரால் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

புதிய வாறுகாலுடன் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

ஊராட்சி செயலர் மாரித்துரை, 1வது வார்டு உறுப்பினர் திருமதி.வெள்ளத்துரைச்சி வெள்ளத்துரை, அரசு ஒப்பந்ததாரர் பார்த்திபன் உட்பட ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்…

Also Read  ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை சந்தித்த இராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு