குழந்தைகளுக்கு பிடித்த பால் பணியாரம் – செய்வது எப்படி?

பால் பணியாரம்
பால் பணியாரம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 2 கப்,
உளுந்து – 1/4 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
தேங்காய்ப்பால் – 5 டம்ளர் அல்லது பசும்பால் – 1 லிட்டர்,
பொரிக்க கடலை எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். தேங்காய்ப்பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து அடுப்பில் லேசாக சூடு செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக மொறுமொறுவென்று பொரித்தெடுத்து, தேங்காய்ப்பாலில் போட்டு பரிமாறவும்.

Also Read  கொரோனா சூத்திரத்தை பிடி! மூலிகை தேநீரை குடி!