ஊரக வளர்ச்சி துறைக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

சார்லஸ் ரெங்கசாமி

* தமிழக அரசின் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறையில் கிராம
ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மகத்தான பணியினை இரவுபகல் பாராமல் சரியான நேரத்தில் விநியோகம் செய்யும் பணியினை
செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண்:20
மூலம் பணியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட 850/- ரூபாய் குறைவான ஊதியம் பெற வேண்டியுள்ளது. எனவே இந்த அரசாணையை இரத்து செய்து, திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை விரைந்து
வெளியிட வேண்டும்.

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே
மாதிரியான மாத ஊதியம் பெறும் வகையில் ஊதியத்தை நிர்ணயம் செய்து, ஊரக வளர்ச்சி இயக்குநரகத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தனி
சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும். இவ்வகை பணியாளர்களின்
ஆண்டுகால பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம்
வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* தமிழக அரசின் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறையில் கிராம
ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரம் செய்து, தரம் பிரித்து கிராமங்கள் தோறும் சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யும் மகத்தான வேலையினை தூய்மை காவலர்கள்
செய்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது மிகக்குறைவான ஊதியமாக ரூ.3600/- வழங்கப்பட்டு வருகிறது.

Also Read  மதுரையில் சார்லஸ் ரெங்கசாமி - திருச்சியில் ஜான்போஸ்கோ பிரகாஷ்

ஆகவே இவர்களுக்கு மிகை ஊதியமாக ரூ.10000/- வழங்கப்பட வேண்டும். இவர்களில் சில தூய்மைக் காவலர்கள்
பணிக்காலத்தின்போது நோய்வாய்பட்டு உடல்நிலை சரியில்லாமலும்,
மாரடைப்பு ஏற்பட்டும் இறந்துள்ளனர். இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு எந்தவித குடும்ப பாதுகாப்பும், பணி பாதுகாப்பும் இதுவரை ஏற்படுத்தி
தரப்படவில்லை.

மேலும் இதுபோன்ற நிலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து
வரும் தூய்மை காவலர்களின் குடும்ப நலன் கருதியும், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கருதியும் அவர்களின் ஊதியத்தினை உயர்த்தித்தர நடவடிக்கை
எடுக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வற்புறுத்தி உள்ளார்.