மலிவு விலை மளிகைக்கடை- மக்கள் பணியில் அதிரடி காட்டும் மாதப்பூர்

திருப்பூர் மாவட்டம்

பல்லடம் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் பல அதிரடி செயல்களை செய்து வருகிறார்.

நூறுநாள் வேலை திட்டத்தில் ஏழை விவாசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மண் அணைத்தல், சிறு தண்ணீர் என பல்வேறு பணிகளை செய்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தி உள்ளார்.

இப்போது….மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

இது ஊராட்சியில் உள்ள ஏழை,எளியோருக்கு மிகவும் பயனுள்ள அற்புதத் திட்டம் ஆகும்.

அசோக்குமாரின் செயலை அனைவரும் பாராட்ட வேண்டும். அனைத்து ஊராட்சியிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த தலைவர்கள் உறுதி எடுக்கவேண்டும்.

Also Read  பருவாய் ஊராட்சி - பல்லடம் சட்டமன்றத் தொகுதி