ஊரணி கண்மாய்கள் சீரமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டும் அச்சங்குடி ஊராட்சி தலைவர்

அச்சங்குடி ஊராட்சி
அச்சங்குடி ஊராட்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை ஒன்றியத்தில் உள்ள அச்சங்குடி ஊராட்சியில் கடும்பாகுடி பள்ளிக்கூடம் மற்றும் கூத்தக்குடி காளிகோவில் போன்ற பெரும்பாலான இடங்களில் குறுங்காடுகள் அமைக்கும் பணிகளும் இந்த குறுங்காடு திட்டத்திற்கு தேவையான கிணறு அமைக்கும் பணிகள் ஊராட்சி தலைவர் மு.கணேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் வள்ளி தலைமையில் நடைபெற்று வருகிறது.

கடம்பாகுடி கண்மாய்களை தூர்வாரி மற்றும் மடைகள் அமைத்து விளைநிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் அமைத்து தரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கிராமத்தில் உள்ள கருங்காவல் ஊரணி, ஆண்டிவயல் ஊரணி, கடம்பாகுடி உறைக்கான் கோட்டை ஊரணி, அச்சங்குளம் பல்லாளம் ஊரணிகளில் படித்துறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கூத்தகுடி கண்மாயில் தடுப்பணை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஆண்டிவயல் கிராமத்தில் பேவர் பிளாக் கல்லால் ஆன சாலைகள் அமைக்கும் பணிகள், மற்றும் கடம்பாகுடி இ சேவை மையம், அங்கன்வாடி மையத்திற்க்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், அறந்தாங்கி சாலை குடியிருப்பு பகுதிகளில் சிமெண்டால் ஆன சாலைகள், மேலும் கூத்தக்குடி அய்யனார் கோயிலுக்கு செல்லும் பகுதியில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

செய்திகள் : தமிழ் நம்பி

Also Read  திருவாக்குடி ஊராட்சி - புதுக்கோட்டை மாவட்டம்