சிறப்பாக செயல்படும் பூம்பாறை ஊராட்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ளது பூம்பாறை ஊராட்சி. ஆராயித்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.

போகர் எனும் சித்தரால் நவபாசானத்தால் செய்யப்பட்ட முருகன் சிலையை மூல விக்ரமாக கொண்ட பழமையான கோவில் உள்ளது.

இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கோபாலகிருஷ்ணன் என்பவர் உள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஊராட்சியில் கொரொனா தடுப்புப்பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அடிப்படை பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது என்றனர் ஊராட்சியில் வாழும் பொதுமக்கள்.

மேலும் பல்வேறு பணிகள் அரசின் ஒத்துழைப்போடு விரைவில் நிறைவேற்றுவேன் என்றார் ஊராட்சி மன்ற தலைவர்.

நாமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சியின் கோரிக்கைகளை எடுத்து கூறுவோம்.

Also Read  முன்னிலைக்கோட்டை ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்