தேசிய விருது பெற்ற ஊராட்சி தலைவியுடன் ஒரு சிறப்பு பேட்டி.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் பஞ்சாயத்து நீர் மேலாண்மை பிரிவில் தேசிய விருது பெற்றுள்ளது.நரயணன்குடியிருப்பில் புதிய குளம் உருவாக்கியதற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது

நிருபர் முருகனிடம் ஊராட்சி தலைவி திருக்கல்யாணி கீழ்கண்டவாறு பேட்டியளித்தார்.

நிருபர் :எந்த திட்டத்தில் புதிய குளம் வெட்டப்பட்டது.

தலைவி :ஊர்க்கு நூறு கைகள் திட்டம் மூலம் புதிய குளம் வெட்டப்பட்டதுஅப்போதய மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி முயற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

நிருபர் :இந்த திட்டத்திற்கு யார்?யாரெல்லாம் நிலம் கொடுத்தார்கள்.

தலைவி :தொழிலதிபர் வரதராஜன்,அசோகன் ஆகியோர் 2.86 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள்.

நிருபர் :விவசாய சங்கங்களின் ஆதரவு எவ்வாறு ?இருந்தது.

தலைவி :விவசாய சங்க தலைவர் எட்வின் காமராஜ் பல மாதங்களாக,பல வேலைகளை விட்டுவிட்டு குளம் வெட்டுவதற்கு முழுமூச்சாக பாடுபட்டார்.

நிருபர் :யார் ?யாரெல்லாம் இதற்காக முழுமூச்சாக பாடுபட்டார்கள்.

தலைவி :நான்,ஊராட்சி செயலர் செந்தூர்பாண்டி,பொதுமக்கள்,விவசாயிகள்,ரவிசந்திரன்,லூர்துமணி,ரூபேஸ்குமார்,ஜஸ்டின்,ஜெயராஜ் மற்றும் பல நல் உள்ளங்கள்.

நிருபர் :குளம் வெட்டியதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதா?

தலைவி :ஆம்.ஐம்பதுக்கு மேற்பட்ட குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.மேலும் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு தனி வாய்க்காலும் வெட்டப்பட்டுள்ளது

Also Read  வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்

நிருபர் :குளத்தை சுற்றியுள்ள ஏரியாக்களில் உப்பு தண்ணீர் நன்னீராக மாறியுள்ளதா?

தலைவி :ஆம்.

நிருபர் :அரசு அதிகாரிகள் யார்? யாரெல்லாம் குளம் வெட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்கள.

தலைவி :முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி IAS ,திட்ட இயக்குனர் தனபதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி,பாண்டியராஜன்,சாத்தான்குளம் முன்னாள் வட்டாட்சியர் ஞானராஜ்,கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.இவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிருபர் :நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான உலகளவிலுள்ள பதினேழு இலக்குகளில் அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான பத்து இலக்குகளில் மக்கள் பயன் அடைவதில் உங்கள் செயல்பாடு எவ்வாறு ?இருக்கும்.

தலைவி :வறுமை ஒழிப்பு,குடிநீர் மற்றும் சுகாதாரம்,தரமான கல்வி,பாலின சமத்துவம்,மாற்று எரிசக்தி,சுற்று சூழல,வேலைவாய்ப்பு,பேரிடர் மேலாண்மை போன்ற இலக்குகளில் மக்கள் பயன் அடைய முழுமூச்சுடன் பாடுபடுவேன்.இலக்குகளை அடைவதற்கு தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள்,அனைத்து துறைகளிலுமுள்ள அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திகொள்வேன்.

tnpanchayatnews ஆன்லைன் மீடியா சார்பாக தேசிய விருது பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்.