50வது நாள் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.

இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் ரூ.263 கோடி வசூல் செய்துள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.217 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ்நட்டில் மட்டும் ரூ.145 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் 50-வது நாளில் அதிக திரையரங்குகளில் ஓடும் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையையும் மாஸ்டர் படைத்துள்ளது. இப்படம் 156 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதற்கு முன் சந்திரமுகி திரைப்படம் 50-வது நாளில் 134 திரையரங்குகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. தற்போது மாஸ்டர் அதை முறியடித்துள்ளது.

Also Read  பிளாஸ்மா தானம் செய்ய காத்திருக்கும், பிரம்மாண்ட டைரக்டர் !