கோவிட் தடுப்பூசி முகாமுக்கான முன்னேற்பாட்டு பணிகளுக்கு 2 லட்சம் கொடுக்க வேண்டும்-தமிழக அரசுக்கு மாநில தலைவர் கோரிக்கை

சார்லஸ் ரெங்கசாமி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் R.சார்லஸ் ரங்கசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.அதில்

கோவிட் நோய் தடுப்பு பணிகளில் கிராம ஊராட்சிகளின் பங்கு அளவில்லாதவை.ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.மறுபுறம் தடுப்பூசி செலுத்திட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 08 வார காலமாக அரசு கோவிட் தடுப்பூசி மெகா முகாம்களை நடத்திட ஆணையிட்டதன்பேரில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக அப்பணியை கிராம ஊராட்சிகள் மேற்கொண்டு வருகிற சூழலில் முகாமுக்கான உணவு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பெருமளவுக்கு செலவாகிறது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற தலைவர்களும்,செயலர்களும் கடன்வாங்கி கைப்பணங்களை போட்டு செலவிட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலான செலவினங்கள் உணவுக்கான செலவினங்களாகும்.ஊராட்சியை பொறுத்தமட்டில் 8000 க்கும் மேற்பட்டதில் நிதிவசதி இல்லை.

நிதி வசதி இருக்கும் ஊராட்சிகளிலும் உணவுக்கான செலவினங்களை மேற்கொள்ள அரசின் எழுத்துப்பூர்வ வழிகாட்டுதல்கள் இல்லை.

இதனால் பணத்தை மீளப்பெற இயலாத நிலை உள்ளது.எனவே ஐயா அவர்கள் தடுப்பூசி முகாமில் கலந்துகொள்ளும் பிறதுறை பணியாளர்களுக்கு உணவு வழங்க ஏதுவாக உத்தரவு பிறப்பிப்பதுடன்,தடுப்பூசி முகாம்களை செம்மையாக நடத்திட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தலா 2.00 லட்சங்கள் தனி ஒதுக்கீடு செய்து நிதி வழங்கிட கனிவுடன் வேண்டுகிறோம்

Also Read  கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

இவ்வாறு அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்