சங்ககிரி ஒன்றியத்தில் 17 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு

ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படும் பணிச் சுமையை குறைக்க வேண்டும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் காலிப் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புதல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் ஊதியமில்லா விடுப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கான விடுப்பு கடிதம் சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலுகத்தில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் ஒன்றிய தலைவர்
டி.ஜீவானந்தம் ஒன்றிய செயலாளர் ஆர்.தனபால் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இப்போராட்டத்தில் 17 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டமானது 12.09.2022 முதல் 14.09.2023 முடிய நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  முறியாண்டம்பாளையம் கிராமத்தில் 28 லட்சம் மதிப்பில் சாக்கடை அமைக்கும் திட்டம் - ஊராட்சி தலைவர் அதிரடி