அக்டோபர் 2ல் வெங்கலக்குறிச்சியில் நடந்த கிராமசபை

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சியில்
மகாத்மா காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு 02.10.2022
அன்று கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில்
கிராமசபை கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
தலைமையில்
நடைபெற்றது

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயகார்த்திக்கேயன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு.கிருஷ்ணன் 5வது வார்டு திருமதி சோனியா 6வது வார்டு முன்னிலை வகித்தனார்கள்
கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது

1.கிராம ஊராட்சியில் உள்ள தெரு சாலைகள்
பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

2.கீழப்பனையடியேந்தல் கிராமத்திற்கு காவேரி கூட்டு குடிநீர் 2 வருடங்களாகவே வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனார்கள் அதன் அடிப்படையில்
நிரந்தரமாக காவேரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமசபை முலம் மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் அவர்களுக்கு பரிந்துறை செய்யபடும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது

3. ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் ஊரணிகள் கண்மாய்கள் வரத்து கால் அனைத்து நீர்வரத்து வழிதடத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை முன்வைக்கபட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டது…

4.
ஊராட்சி உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கு உள்ள தெரு சாலைகளை
கழிவுநீர் வடிகால் அமைத்து பேவர்பிளாக் சாலை அமைத்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது……

Also Read  அழகியநல்லூர் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்

5. ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் ஆதரவேற்றோர்கள் விதவைகள் களுக்கு தமிழ்நாடு அரசு வருவாய்துறை மூலம் வழங்கபட்டு வந்த முதியோர் உதவி பணம்(oAP) எந்தவிதமான காரணங்களை தெரிவிக்காமல் ரத்து செய்யபட்டுள்ளதை உரிய விசாரணை செய்து தகுதி உள்ள பயனாளிகளுக்கு மீண்டும் OAP வழங்க வேண்டுமாய் தீர்மானம் நிறைவேற்றபட்டது

கிராமசபை கூட்டத்தில்
சிறப்பு விருந்தினார்களாக
வட்டார குழந்தைகள் நல அலுவலர் சசிகலா அவர்கள் மற்றும் திருமதி.சண்முகவள்ளி அவர்கள்
வெங்கலகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சேதுராமன் அவர்கள்
வெங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் : திருமதி.இரா ஆலிஸ் அவர்கள்
கீழத்தூவல் சுகதார ஆய்வாளர் திரு.நோதஜி அவர்கள்
விவசாயத்துறை மற்றும் தோட்டகலைத்துறை அலுவலர்கள்
அங்கன்வாடி பணியாளர்கள்
காவல்துறை அதிகாரிகள் கிராம பொதுமக்கள் ஏராளமனோர்கள் கலந்துகொண்டார்கள்
முடிவு வில் ஊராட்சி செயலாளர்
திருமதி.பொன்மணி
நன்றி கூறினார்